- This event has passed.
விநாயகர் சதுர்த்தி

நிகழும் விசுவாவசு வருஷம் ஆகஸ்டு மாதம் 27ம் தேதி, ஆவணி மாதம் 11ம் நாள் புதன்கிழமை சித்திரை நட்சத்திரம் சுக்ல சதுர்த்தி (27.08.2025) – அன்று ஸ்ரீ விஜய கணபதி அருளால் நமது ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதிக்கு காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை அதை தொடர்ந்து காலை 10.00 மணி அளவில் ஸ்ரீ விஜய கணபதி திருவீதி உலா நடைபெறும்.
திருவீதி உலாவை, மகிழ்ச்சியோடு சிறப்பிக்கும் வகையில் உலாவின் போது வலம் வரும் விஜய கணபதியின் அருளை பெற்று, வளமான வாழ்வு பெற பக்தகோடிகளை அன்புடன் அழைக்கிறோம்.
அருள்மிகு ஸ்ரீவிஜய கணபதி, ஆலயத்திலிருந்து புறப்பட்டு பெருமாள் நகர், ARG நகர், திருத்தணி நகர், பல்லவா கார்டன், கார்டன் உட்ராஃப் நகர், நட்பு நகர் 5-வது மெயின் ரோடு, பெருமாள் நகர், ஈஸ்வரன் நகர், காமாக்ஷி நகர், பவானி நகர், குமரன் காலனி வரை சென்று பக்தகோடிகளுக்கு அருள் பாலித்து மீண்டும் பெருமாள் நகர் வழியாக ஆலயம் வந்தடைவார்.
முக்கிய குறிப்பு:
அருள்மிகு விஜயகணபதி ஆலயத்தின் மாடியில் சிறுகூடம் (Mini Hall) அமைக்கப்பட்டுள்ளது. பத்தகோடிகள் அனைவரும் சுபகாரியங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.